ஒரே ஷாட்டில் உருவான ‘டிராமா’ படத்திற்கு விஜய்சேதுபதி செய்த உதவி!

செவ்வாய், 10 நவம்பர் 2020 (17:59 IST)
‘டிராமா’ படத்திற்கு விஜய்சேதுபதி செய்த உதவி!
உலகிலேயே சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்று தமிழில் தயாராகி வருகிறது என்பதும் ’டிராமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை புரமோஷன் செய்யும் பணியை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக ’டிராமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிட வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக நீளமான ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்து விஜய் சேதுபதி அந்த பட்த்தின் குழுவினர்களுக்கு உதவி செய்து உள்ளார். மேலும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்