விஜய் நடிக்கவுள்ள 65வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாகுபலி ஹீரோயின்

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:10 IST)
தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு  விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்குக் காரணம் விஜய்தான் என சொல்லப்படுகிறது. அறிவிப்பை வெளியிட வேண்டாமென சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விஜய் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஏஆர் முருகதாஸ் கூறிய கதையின் முதல் பாதி விஜய்க்கு பிடித்த இருந்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதி அவருக்கு திருப்தி இல்லை என்றும் அதனை சரிசெய்து கொண்டு வருமாறு ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் ஏஆர் முருகதாஸின் முழு கதையும் தனக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

இந்நிலையில், விஜய் 65 படத்தில் அவருக்கு ஜொடியாக பத்து வருடங்களுக்கு முன் அவருடன் சுறா படத்தில் நடித்த தமன்னா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
தமன்னா பாகுபலி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்