மாஸ்டர் படத்தில் விஜய்யின் ஓபனிங் சீன் இதுதான் – நண்பர் பகிர்ந்த ரகசியம்!

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:37 IST)
மாஸ்டர் படத்தில் விஜய்யின் ஓபனிங் காட்சி என்ன என்பது குறித்து அந்த படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திரையரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ள படம் என்றால் அது மாஸ்டர்தான். கிட்டத்தட்ட ரிலீஸுக்கு இரு வாரங்களுக்கு முன்னால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அந்த படத்தை வாங்கியவர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் மாஸ்டர் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தில் விஜய் படத்தின் ஓபனிங் காட்சி என்ன என்பது குறித்து விஜய்யின் நெருங்கிய நண்பரும், மாஸ்டர் படத்தில் நடித்துள்ளவருமான சஞ்சீவ் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் கூற்றுப்படி ‘பழைய நண்பர்களை சந்திக்க வரும் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியபடியே வருவார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்