பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இவர்தான் – வெளியான புகைப்படம்!

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:31 IST)
பிகில் படத்தில் இரண்டு விஜய் நடிக்கும் காட்சிகளில் அவருக்கு டூப் போட்டது யார் என்ற தகவல் இப்போது உருவாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. ஆனாலும் வசூல் மழையில் நனைந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் தயாரிப்புத் தரப்போ தங்களுக்கு படத்தைத் தயாரித்ததில் 20 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டுகிறதாம். இது விஜய் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த படத்தில் விஜய் ராயப்பன் என்ற கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்தார். இதில் இரண்டு விஜய்யும் ஒரே காட்சியில் தோன்றும்போது ஒரு விஜய்க்கு ஸ்ரீராம் என்ற நடிகர் டூப் போட்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்