தயாரிப்பாளர்களை தவிக்கவிட்ட சிம்பு… ஐய்யப்பனை ஏமாற்றவில்லை – நெட்டிசன்கள் குறும்பு !

வியாழன், 12 டிசம்பர் 2019 (08:40 IST)
நடிகர் சிம்பு சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு சென்றது தொடர்பான புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நடிகர் சிம்பு தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஷூட்டிங் செல்லாமல் தவிக்க விடுவதில் வல்லவர் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் அவரிடம் போய் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்களும் உண்டு. அதற்கு சமீபத்திய உதாரணம் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

மாநாடு படம் தொடங்கப்படாமலேயே நின்றதற்கு சிம்புதான் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட நெட்டிசன்கள் சிம்புவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மீண்டும் மாநாடு படம் தொடங்கும் எனவும் மாலை போட்டிள்ள சிம்பு சபரிமலைக்கு போய் வந்தபின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் சொல்லப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் இடுமுடி கட்டி ஐய்யப்பன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவின.

தயாரிப்பாளர்களிடம் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றுவது போல ஐய்யப்பனையும் ஏமாற்றாமல் ஐய்யப்பனை சென்று தரிசனம் செய்துவிட்டார் என்றும் கூறி கேலி செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்