மன்சூர் அலிகானை கட்சியில் இருந்து நீக்கிய பொதுச்செயலாளர்.. அரசியல் காமெடி ஆரம்பம்..!

Mahendran

சனி, 16 மார்ச் 2024 (07:25 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் அவரே கட்சி தலைவராகவும் கண்ணதாசன் என்பவர் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் கட்சி தலைவர் என்ற முறையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று பேட்டி அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அவசர பொதுக்குழு கூடியதாகவும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு முழு உரிமை அளிக்க முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் திடீரென இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகானை நீக்குவதாக பொதுச்செயலாளர் தீர்மானம் இயற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இனி இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சிக்கு தலைவர் கிடையாது என்றும் தலைவரின் முழு அதிகாரமும் பொது செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டதாகவும் இனிமேல் அவருடைய வழிகாட்டின் படி தான் கட்சி செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்