பாகிஸ்தான் நிறுவனத்திடம் அரசியல் கட்சிகள் நிதி பெற்றதா? என்ன நடந்தது?

Siva

வெள்ளி, 15 மார்ச் 2024 (09:06 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்ற கட்சிகள் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள்  உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த சில தினங்களில், ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி கராச்சியில் உள்ள HUB Power company என்ற நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளன.

ஆனால் இந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது என்றும் தேர்தல் பத்திர நன்கொடை என்பது இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்க விதியில் இடம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனம் இந்தியாவில் உள்ளது என்றும், அந்த நிறுவனத்திடம் இருந்து தான் இந்த பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தானில் இருந்து பணம் வரவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்