உடல் ஆரோக்கியத்தை காக்கும் மரச்செக்கு எண்ணெய் !!

கலப்படமற்ற, சுத்தமான இயற்கை குணங்கள் மாறாமல் எண்ணெய் கிடைக்கவே, பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.  ஆனால், காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து விட்டதாலும், முறையான கால்நடைகளின் பராமரிப்பு இல்லாமல் போனதாலும் மரச்செக்கு தொழில் நலிந்து  விட்டது.

மரச்செக்கில் இருக்கும் உரல் உலக்கையானது வாகை மரத்தால் செய்யப்பட்டு இருக்கும். இந்த மரச்செக்கில் பொருட்களை அரைக்கும்போது பிழியப்படும்  எண்ணெய்யும் சூடேறாது, தானியங்களின் வாசனையும் மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் தரமான ஹியர் பகுதிதான். இந்த ஹியர் பகுதியால் மரச்செக்கு  சுழலும்போது சீரான சுழற்சியால் உரல் உலக்கையின் தேய்மானம் குறைகிறது. இதனால், எண்ணெய் அதிகமாக சூடாவது தடுக்கப்படும். 
 
இயந்திரத்தில் எண்ணெய் அரைத்து எடுக்கும்போது எண்ணெயில் கை வைக்க முடியாத அளவுக்கு வெப்பமாக இருக்கும். இந்த அளவுக்கு எண்ணெய் வெப்பமானால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் குறைந்துவிடும் என்பதே உண்மை. இதுபோன்ற இயந்திரத்தில் வழியும் எண்ணெய்களில் பலகாரம் சுடும்போது ஒருமுறைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. இதுதவிர, இயந்திர எண்ணெய்யை எடுத்துக் கொள்வதால் உடலுக்குப் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
 
மரச்செக்கு எண்ணெய்யானது பார்ப்பதற்குச் சிறிது நிறம் குறைவாகக் காணப்படும். நல்ல ருசியுடனும், ஒரு வருட காலமும் தாங்கக் கூடியது. மரச்செக்கு எண்ணெய்யில் இயற்கையான தானிய மணம் காணப்படும். 

மற்ற எண்ணெய்களைக் காட்டிலும், மரச்செக்கு எண்ணெய் சற்று விலை அதிகம்தான். ஆனாலும், மக்கள் ஆரோக்கியத்தைத் தேடி பயணிப்பதால் அதைப்பற்றிக்  கவலைப்படுவதில்லை. தற்போது பெருநகரங்களில் உள்ள பசுமை அங்காடிகளில் மரச்செக்கு எண்ணெய்கள் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். 
 
மரச்செக்கு நல்ல மணத்துடன் கெட்டித்தன்மை, பிசுபிசுப்புத் தன்மை அதிகமாக இல்லாமை என பல குணங்களைக் கொண்டிருக்கும். முற்காலத்தில் மரச்செக்கில்  இருந்து வெளிவரும் புண்ணாக்குகளைத்தான் இயற்கை உரங்களுடன் கலந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தனர்.
 
நாகரிகம் எனச் சொல்லி நாம் இழந்து கொண்டிருக்கும் பொக்கிஷங்கள் இங்கு ஏராளம். எனவே உடல் ஆரோக்கியத்தை காக்கும் மரச்செக்கு எண்ணெய்யை அன்றாடம் பயன்படுத்தி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்