ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை கரைக்க உதவும் பூண்டுபால்...!!

காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால் பருமனை குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

பாலில் பூண்டை வேக வைத்து பனங்கற்கண்டு, மிளகு தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் பல நன்மைகள் உண்டு.
 
சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபடலாம். இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு தொல்லை மற்றும் கால் வலி போன்ற  பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
 
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டுப் பால் குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
 
நுரையிரல் அலர்ஜி உள்ளவர்கள் பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால் நுரையீரல் அழற்சி பிரச்சனை விரைவில் குணமாகும். மலேரியா, காசநோய், யானைக்கால் நோய், நோய்களை உண்டாக்கும் கிருமிகள் எதிராக பூண்டுப்பால் செயல்படுகிறது.
 
பிரச்சனையை கட்டுப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது. மேலும் செரிமான திரவத்தை தூண்டி உணவுகளை எளிதில் செரிமானம் அடைய செய்ய பூண்டுப்பால் உதவுகிறது.
 
பூண்டு பால் நமது இரத்த அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரத்த ஓட்டத்தின் வேகத்தை சமநிலைப் படுத்துகிறது. எனவே இரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் இந்த பூண்டு பாலை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
 
பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும். எனவே இதை பாலுடன் கலந்து எடுத்துக்கொள்வதால் சளி, காய்ச்சல் ஏற்பட்டவுடன் இந்த பூண்டு பாலை பருகி வந்தால்  உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
40 வயதை தாண்டியவுடனே அனைவருக்கும் வரும் ஒரு பிரச்சினை மூட்டு வலி, கை கால் வலி, சோர்வு, வாய்வு மற்றும் செரிமான பிரச்சனை போன்றவைகள். இவை அனைத்திற்குமே ஒரே எளிய தீர்வு இந்த பூண்டு பால். மேலும் நமது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்த  ஓட்டத்தை சீராக்கி, நல்ல செரிமான சக்தியையும் இந்த பூண்டுபால் கொடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்