சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

Prasanth Karthick

திங்கள், 22 ஏப்ரல் 2024 (10:50 IST)
சித்திரா பௌர்ணமி நாளில் பலரும் விரதம் இருந்து வழிபட்டபின் நிவேத்தியமாக அளிக்க சித்தரான்னம் பிரபலமான உணவாகும். வீட்டிலேயே எளிதாக சித்ரான்னம் எப்படி செய்வது என பார்ப்போம்.



சித்திரா பௌர்ணமியில் பலவகை கலவை சாதங்களும் உணவாக கொள்ளப்படுகிறது. எனினும் அவற்றில் சித்ரான்னம் பிரபலமானது. நமது ஊரில் எலுமிச்சை சாதம் போலதான் கர்நாடகாவில் சித்ரான்னம்.

தேவையான பொருட்கள்: எலுமிச்சை பழம், முந்திரி, மஞ்சள் தூள், கடுகு, கடலை பருப்பு, உளுந்து, பச்சை மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை, உப்பு

சாதத்தை குழையாமல் உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் முந்திரியை சிறு துண்டுகளாக உடைத்து போட்டு வறுக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து வறுக்க வேண்டும்.

வடித்து வைத்த சாதத்தை பாத்திரத்தில் கொட்டி 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஆற வைக்க வேண்டும்.

எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்து வைத்த கலவையை சாதத்தில் கொட்டி எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். இப்போது சுவையான சித்ரான்னம் தயார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்