மயில் இறகுகளை வீட்டில் வைப்பதால் என்ன நன்மைகள்?

செவ்வாய், 12 ஜனவரி 2021 (23:38 IST)
பல்வேறு சிறப்புக்கள் கொண்ட மயில் இறகுகள் வீட்டில் வைத்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் எட்டு எண்ணிக்கையில் மயில் இறகை வைத்தால் வாஸ்து குறைபாடுகளை நீக்கும்.  
 
வீட்டின் பூஜை அறையில், ஹால் ரூமில் வைக்கலாம். பூஜை அறையில் எட்டு இறகு  சேர்த்து ஒரு வெள்ளை துணியால் அல்லது வெள்ளை நூலில் கட்டி "ஓம் சோமாய  நமஹே" என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்.
 
மயில் முருகப்பெருமானின் வாகனம் என்பதால் அதன் இறகு  புனிதமாக கருதப்படுகிறது. முருகன் கோவில்கள் மற்றும் காவடி எடுக்கும் பொழுது மயிலிறகு தான்  பயன்படுத்துவார்கள்.
 
தம்பதியர்கள் பிரச்சனைகள் அடிக்கடி வருவது, வீண் வாக்குவாதம் போன்றவற்றை தவிர்க்க மயில் இறகு பயன்படுத்தலாம். புதியதாக திருமணம் ஆன தம்பதியர்கள் படுக்கை அறையில் இதனை வைத்து கொண்டால் அந்நோன்யம் இருக்கும் என்பது நம்பிக்கை. மயிலிறகு வைப்பதால் பூச்சிகள், பல்லி  தொல்லைகளும்  நீங்கிவிடும்.
 
நாம் வீட்டில் பணம் மற்றும் நகைகள் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைப்பதன் மூலம் அலமாரியில் செல்வ வளம் அதிகரிப்பதோடு, செல்வம்  நிலைக்கவும் செய்யும்.
 
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
 
வீட்டில் இருக்கும் தோஷங்கள் மட்டுமில்லாமல் கிரஹத்தால் தோஷம் இருப்பவர்கள் கூட இதனை வீட்டில் வைத்து கொள்ளலாம். குறிப்பாக சனி தோஷம் உள்ளவர்கள் மூன்று மயில் இறகு சேர்த்து ஒரு கருப்பு துணி அல்லது நூலில் கட்டி வைத்து விட வேண்டும்.
 
பிறகு ஓம் சனீஸ்வர நமஹே என்ற மந்திரத்தை கூறவேண்டும். இந்த மந்திரம் சனிக்கிழமை அன்று இருபத்தியொரு முறை கூறினால் சனி கிரக தோஷம் நிவர்த்தியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்