ஆறு தினங்கள் சஷ்டி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வியாழன், 2 நவம்பர் 2023 (18:15 IST)
ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி விரதம் என்பது முருக பக்தர்களுக்கு மிகவும் விருப்பமானது என்பதும் லட்சக்கணக்கான பக்தர்கள் சஷ்டி விரதம் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சஷ்டி விரதம் இருக்கும் ஆறு தினங்களிலும் காலை எழுந்து நீராடி,  சந்தானம் குங்குமம் வைத்து, முருகனை அர்ச்சித்து வழிபட வேண்டும். விரத நாட்களில் பகலில் தூங்கக் கூடாது. ஆறு நேரமும் பூஜை செய்ய வேண்டும். 
 
முருகனின் சரித்திரங்களையும் பாடல்களையும் கேட்க வேண்டும். மேலும் தியானம் ஜெபம் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஆறு தினங்கள் சஷ்டி விரதம் இருந்தால் வினைகள் வெந்து சாம்பலாகும் என்றும் நினைக்கும் காரியம் நடக்கும் என்றும் துன்பம் என்று வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருக்கும் என்றும் ஆன்மீகவாதிகளின்  நம்பிக்கையாக உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்