வரும் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்-அமைச்சர் துரைமுருகன்

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:25 IST)
தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடக முதல்வர் மற்றும் துணைமுதல்வர் கூறிய நிலையில், எதோ எதிரி நாட்டு மோதுவது போல நினைக்கிறார்கள் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு  வினாடிக்கு 2600 கன அடி நீர் 15 நாட்களுக்குத் திறக்க  காவிரி நீர்  ஒழுக்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.

இதற்கு கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார் நேற்று,’’ நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால், கே.ஆர்.எஸ். கபினி அணைகளில் இருக்கும் தண்ணீர் எங்கள் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை. அதனால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது ‘’என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தமிழக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  காவிரியில் 13 ஆயிரம் கன அடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருபது ஜன நாயகத்திற்கு நல்லதல்ல.

நான் எத்தனையோ பேரை பார்த்துவிட்டேன் ஆனால், கர்நாடக முதல்வர்  சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியாக உள்ளது . எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள்.  ’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  வரும் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்