வறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யவேண்டும்...?

தக்காளி மற்றும் வெள்ளரி இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். எப்படி என்றால் சாறாகப் பிழிந்து..! இவை இரண்டையும் நன்றாக அரைத்து சாறாக்கி முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் உலர வைக்கவேண்டும். அதன் பிறகு கழுவினால் வறண்ட சருமம் சரியாகியிருக்கும்.

முல்தானி மட்டி பொடியைப் பன்னீருடன் கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கழுவினால், சரும வறட்சி நீங்கும். இதனைத் தினசரி செய்யலாம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இதை முயலலாம்.
 
மஞ்சள் தேய்த்துக் குளிப்பது ஒருபுறம், தூய மஞ்சளை நன்கு அரைத்து, அதில் நீர் சேர்த்து பசை போல் ஆக்கி, முகத்தில் தடவி, அது உலர்ந்த பிறகு நன்கு கழுவ  வேண்டும்.
 
வெண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நீரில் கழுவினால், வறண்ட சருமம் நீங்கும்.
 
அரிசி மாவுடன், வெள்ளரிச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால், வறண்ட சருமத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
 
ஆவாரம் பொடியுடன், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவை நன்றாக அரைத்து நீரில் சேர்த்துக் கலக்க வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர  வைத்துவிட்டு பின்பு நன்கு கழுவினால், வறண்ட சருமம் மாறும்.
 
பச்சை முட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதனுடன் தேனைக் கலந்து முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும்.  பின்பு நன்கு சோப்பு போட்டுக் கழுவிவிட வேண்டும். ஏனென்றால், தேனும் முட்டையும் முழுமையாகச் சருமத்தை விட்டு நீங்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்