வீட்டிலேயே முறையான தலைமுடி பராமரிப்பு செய்வது எப்படி...?

கூந்தல் உதிராமல் இருப்பதோடு, நீளமாகவும் வளரும். பொதுவாக கூந்தல் ஊதிர்வதற்கு முடித்துளைகளில் ஏற்படும் பிரச்சனைகளே ஆகும். அத்தகைய முடித்துளைகளில் என்னென்ன பிரச்சனைகள் வருகிறதென்றால், பொடுகு, அதிகபடியான எண்ணெய், வறட்சியான ஸ்கால்ப் போன்றவையே. ஆகவே அதனை  வீட்டிலேயே பராமரிக்க ஒரு சில வழிகள் உள்ளது.

* தலைக்கு குளிக்கும் போது மிகவும் சூடான நீரில் குளிக்க வேண்டாம். ஏனெனில் அந்த வெப்பம் முடித்துளைகளில் பிடித்திருக்கும் முடிகளை வலுவிழக்கச்  செய்யும். பின் முடி உதிர்தல் ஏற்படும், ஆகவே அந்த முடித்துளைகளை வலுவுடன் வைப்பதோடு, சுத்தமாகவும் வைக்க வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலச  வேண்டும். 
 
குளித்தவுடன் கூந்தலை துடைக்கும் போது, கவனமாக மென்மையாக துடைக்க வேண்டும். ஏனெனில் கூந்தல் ஈரமாக இருப்பதால் அந்த நேரத்தில் அதனை அழுத்தி  துடைப்பதால், வலு இல்லாததால் உதிரும்.
 
* நிறைய பேர் கூந்தலை மட்டும் நன்கு நீரில் அலசி, ஸ்காப்பை சுத்தமாக நீரில் அலச மாட்டார்கள். சொல்லப்போனால், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புக்கள் ஸ்கால்ப்பை முற்றிலும் சுத்தம் செய்யும் என்று சொல்ல முடியாது. என்ன தான் ஷாம்பு போட்டாலும், நீரில் அலசும் போது, விரல்களால் நன்கு தேய்த்து அலச  வேண்டும். அவ்வாறு குளித்தால் தலை சுத்தமாவதுடன், தலையில் பொடுகு, அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்கும்.
 
* சுடு தண்ணீரில் தலையை அலசினால் முடித்துளைகள் பாதிக்கப்படும். ஆனால் ஸ்டீம் செய்தால் தலையானது சுத்தமாகும். தலையை எவ்வளவு தான் தேய்த்து  குளித்தாலும், அந்த அழுக்குகள் போகாமல் இருக்கும். அதற்கு ஒரே வழி ஸ்டீம் செய்வது தான். இதனால் தலையில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி,  கூந்தல் உதிர்தலும் ஏற்படாமல் இருக்கும்.
 
* தினமும் தலையை சீவும் போதும், சீப்பின் 100 பற்களாவது தலையில் படவேண்டும். அதிலும் சிலரது பிரச்சனை என்னவென்றால், என்ன செய்தாலும் கூந்தல் நீளமாக வளருவதில்லை. இதற்கு பெரும் காரணம் முடியின் மயிர்கால்கள் செயலற்று இருப்பதே ஆகும். அதாவது போதிய அளவு கூந்தலுக்கு முறையான  பராமரிப்பான சீவுதல் இல்லை. ஆகவே நீளமான கூந்தல் வேண்டுமென்றால் தினமும் கூந்தலை நன்கு நீண்ட நேரம் சீவுங்கள்.
 
* தலையில் பருக்கள் வருவதற்கு எண்ணெய் பசை அதிகமாகவும், அழுக்குகள் இருப்பதுமே காரணமாகின்றன. இந்த பருக்கள் ஸ்கால்ப்களில் வருவதால், வலி மட்டும் ஏற்படாமல், முடித்துளைகளையும் மூடி, கூந்தல் வளராமல் தடுக்கிறது. அதற்கு தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புகளில் ஜிங்க் அல்லது மற்ற பொருட்கள் இருக்குமாறு வாங்கி தலைக்கு பயன்படுத்தினால், அந்த பருக்கள் நீங்கிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்