ஆண்டை டீம்களுக்கு ஆப்பு அடிக்கும் குட்டி டீம்கள்! அடுத்தடுத்த போட்டிகளில் CSK, MI, RCB தோல்வி! – தடம் மாறும் ஐபிஎல்?

Prasanth Karthick

புதன், 3 ஏப்ரல் 2024 (10:29 IST)
ஐபிஎல்லின் இந்த சீசனில் பெரிய அணிகள் மோசமாக தோல்வி அடைவதும் சிறிய அணிகள் அடுத்தடுத்து வெற்றி பெறுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. 5 முறை ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள், ஒருமுறையாவது கப் வெல்லாதா என்ற எதிர்பார்ப்பில் ஆர்சிபி அணி என பல அணிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளன. ஆனால் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி அதிர்ச்சிகரமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பேற்றதே இதற்கு காரணம் என ரோஹித் சர்மா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக இருந்தபோதும் இவ்வாறான தொடர் தோல்விகளை மும்பை அணி சந்தித்துள்ளதாக ஹர்திக் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி என்று ஏறுவரிசையில் சென்றுக் கொண்டிருந்தாலும் முந்தைய 2 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே கண்ட டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்!

நேற்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொண்ட ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் மொத்த விக்கெட்டையும் இழந்து டக் அவுட் ஆனது. இந்த முறையும் ஆர்சிபின் கோப்பை கனவு கனவாகவே போய்விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே ஆர்சிபி வென்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே CSK, MI, RCB ஆகிய மூன்று அணிகளும் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளன.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை போட்டியிட்ட 3 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டியிட்ட 2 போட்டிகளிலும் வென்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த முறை ஐபிஎல் சீசனில் பெரிய அணிகளை தவிர்த்து மற்ற ஏதாவது ஒரு அணி கோப்பையை வெல்லலாம் என்ற யூகங்கள் எழத் தொடங்கியுள்ளன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்