கொரோனா பாதிப்பால் உலக நாடுகளே முடங்கி கிடந்தாலும் அமெரிக்க மற்ற நாடுகளுடனான பிரச்சினையை தவிர்க்கும் எண்ணத்தில் இல்லை. சமீபத்தில் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்திருக்கின்றன. அப்போது அங்கு வந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான ஆயுதமேந்திய படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளன. ஆனால் அவை தாக்குதல் எதுவும் தொடுக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் ஈரான் ஆயுதமேந்திய படகுகளை கண்ட மாத்திரத்தில் சுட்டு வீழ்த்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே போர் மூளும் சூழல் ஏற்படுமோ என உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன. எனினும் அமெரிக்காவின் அறிவிப்பு ஈரான் இன்னமும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.