தனாஹுன் மாவட்டத்துக்குட்பட்ட ஐனா பஹாரா என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மர்சங்டி ஆற்றில் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தை நேபாள காவல் துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில், 14 பேர் பலியானதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.