பேருந்தில் உரசிய மின்கம்பி! பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்! - நீலகிரியில் சோகம்!

Prasanth Karthick

சனி, 17 ஆகஸ்ட் 2024 (09:31 IST)

நீலகிரியில் அரசு பேருந்தின் மீது மின்கம்பி உரசியதில் பேருந்து ஓட்டுநர் பரிதாப பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பாதையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் 43 வயதான பிரதாப். வழக்கம்போல பிரதாப் பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றபோது கோத்தகிரி அருகே தாழ்வாக மின்கம்பி ஒன்று தொங்கிக் கொண்டிருந்துள்ளது. 

 

அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்தில் மின்கம்பி உரசி தீப்பொறிகள் எழுந்துள்ளது. உடனடியாக பிரதாப் பயணிகளை இறங்கி போகுமாறு எச்சரித்துள்ளார். பயணிகளை பத்திரமாக வெளியேற்றிவிட்டு பிரதாப் வெளியேற முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

பிரதாப்பின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் ப்ரதாப்பின் மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்