மைதானத்தில் கூட்ட நெரிசல்: 17 பேர் பலி

சனி, 11 பிப்ரவரி 2017 (12:27 IST)
கால்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள ஒரு மைதானத்தில் கால் பந்தாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் போட்டியை காண பொதுமக்கள் அதிமகாக கூடினர். சுமார் 8000 பேர் வரை அமர்ந்து ரசிக்கக்கூடிய மைதானத்தில் 10000க்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 17 பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர்.. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்