கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா, வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளபோது வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் வடகொரியாவுக்கு கிலியை ஏற்படுத்தும் விதமாக தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. 8 நிலப்பரப்பு ஏவுகணைகளை தென்கொரியா வெற்றிகரமாக சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.