வடகொரியாவில் கையை மீறிப்போன கொரோனா பாதிப்பு: உலக நாடுகள் அச்சம்!

வெள்ளி, 3 ஜூன் 2022 (08:00 IST)
வட கொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே நிலையில் தற்போது அங்கு கையை மீறி போய் விட்டதாக கூறப்படுவதால் உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன
 
வடகொரியாவில் தினந்தோறும் இரண்டு லட்சத்திற்கு அதிகமான கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பான எந்தவித தகவல்களும் ஊடகங்கள் மூலம் உலகிற்கு தெரிய வருவதில்லை என்று சர்வதேச சமூகம் கருதுகிறது
 
கொரோனா  வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை வட கொரிய அரசாங்கம் மறைப்பதாகவும், இதனால் உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனையடுத்து கொரோனா பாதிப்பு குறித்து தகவல்களை வடகொரியா அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் அங்கு உண்மையிலேயே என்ன சிக்கல் இருக்கின்றன உண்மையான நிலவரம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவின் தலைவர் அவர்கள் கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்