நோயாளிகள் பேராபத்தை சந்தித்து வருகின்றனர்: சத்யராஜ் மகள் அதிர்ச்சி தகவல்

வியாழன், 22 டிசம்பர் 2022 (18:34 IST)
நோயாளிகள் பேராபத்தை சுற்றி வருகின்றனர் என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
என்னுடைய நோயாளி ஒருவர் மருந்து வாங்குவதற்காக மருந்து கடைக்கு சென்றார். அவர் வாங்கிய 4 மருந்துகளில் மூன்று மாத காலாவதியான மருந்து. காலவதியான மருந்துகளை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் மருந்துகள் வாங்கும்போது மருந்துகள் காலாவதி தேதியை சோதனை செய்து வாங்க வேண்டும். 
 
குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்து, மளிகை பொருட்கள் ஆகியவற்றை கண்டிப்பாக காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். காலாவதி மருந்து கொடுத்தால் அதை திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு மருந்து வாங்கிக் கொள்ளவேண்டும்.
 
மருந்து கடை உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். காலாவதியான மருந்து கொடுத்தால் உடல் உபாதை ஏற்படும் என்று உங்களுக்கு தெரிந்தும் தயவு செய்து அந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்காதீர்கள். எந்த துறையில் தவறு நடந்தாலும் மருத்துவத்துறையில் கண்டிப்பாக தவறு நடக்க கூடாது என்று சத்யராஜின் மகள் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது மற்றபடி
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்