ஆர் ஜே பாலாஜி & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் – டைட்டில் & பர்ஸ்ட் லுக் வெளியீடு!

வியாழன், 15 டிசம்பர் 2022 (08:50 IST)
ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படமான ரன் பேபி ரன் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரேடியோ வர்ணனையாளரான ஆர் ஜே பாலாஜி, திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இப்போது கதாநாயகன் மற்றும் இயக்குனர் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார்.

அவர் நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இப்போது ஐஸ்வர்யா ராஜேஷோடு இணைந்து ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.2 இந்த படத்தை சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்