ஏமன் புயல்: இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

திங்கள், 28 மே 2018 (11:39 IST)
ஏமன், ஓமன் நாட்டை மெகுனு என்ற புயல் தாக்கியதால் இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.

 
 
தெற்கு ஒமன் மற்றும் ஏமன் நாட்டில் மெகுனு புயல் காரணமாக அங்குள்ள சொகேட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
 
இந்த புயல் காரணமாக 3 இந்தியர்கள் உள்பட இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்த 3 இந்தியவர்களின் விவரம் குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புயலால் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பலர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்