லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் அரச அதிகாரிகளுக்கும் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து, 8 பேர் உயிரிழந்ததாகவும், 2,750 பேர் காயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா போர் தொடங்கியதிலிருந்து, ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக கைத்தொலைபேசிகளை தவிர்த்து பேஜர் கருவிகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்திய பேஜர் கருவிகள் ஒரே சமயத்தில் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்புக்கு, பேஜர் கருவிகளில் உள்ள லித்தியம் மின்கலங்கள் அதிகம் சூடேறியது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இஸ்ரேலின் சைபர் தாக்குதலாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ளது.