இந்த நிலையில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ஏற்கனவே குடியிருந்து வந்த வீட்டிற்கு பலகாரங்கள் எடுத்துகொண்டு ரக்க்ஷிதா வந்துள்ளார். அப்பொழுது அங்குள்ள வீட்டில் லாப்ரடர் வகை நாய் நீண்ட நாட்களாக வளர்த்து வருகின்றனர். நாயை கட்டாத நிலையில், வீட்டின் வெளிப்புறம் அங்கு தெரு நாய்களுடன் படுத்து கொண்டு இருந்துள்ளது.
இதனிடையே அப்பகுதியில் அந்த வளர்ப்பு நாயை முறையாக கட்டிப் போடுவதில்லை என்றும், சாலையில் சுற்றித் திரிவதால் அந்த பகுதியில் கடந்து செல்ல மக்கள் அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அந்த நாய் ஒருவரை கடித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.