உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நோபல் விழாவின் 2020ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக இயற்பியல், வேதியியல், உலக அமைதி, இலக்கியம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்கு நோபல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் ஏல முறைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்தும், புதிய ஏல அமைப்புகள் உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட பால் மில்க்ரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.