ஈரான் நாட்டில் வசிக்கும் பெண்கள் 7 வயதிற்கு மேல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில், 22 வயது பெண் மாசா அமினி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஈரானில் அரசுக்கு எதிராககப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நேற்று, குர்கிஸ்தான் உள்ளிட்ட 30 நகரங்களில் பெண்களின் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் 31 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அதில், மாஷா அமினியின் மரணம் வருத்தம் அளிக்கிறது. இதற்காக நடக்கும் வன்முறை ஏற்புடையதல்ல. கலவரத்தின் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஈரான் நாட்டின் அமைதியைக் குழைக்க யாருக்கும் அனுமதியில்லை என்று கூறினார்.