பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ‘தெரீக் இ இன்சாப் ’ கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால் இம்ரான் கான் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சர்க்கரை ஆலையில் நடைபெற்ற மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் செரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் , சவுத்ரி சக்கரை ஆலையின் பங்குகளை விற்பது மற்றும் வாங்குவதில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நவாஸின் மகள் அவரது உறவினர் அப்பாஸ் ஆகியோர் மீது பலகோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக தக்க ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்பட்டது.