சமீபத்தில் மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நிராகரித்தது. இதற்கு எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அரசும் உலக நாடுகள், மற்றும் ஐநாவில் முறையிட்டுப் பார்த்தும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிவிட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ,நேற்று தனது தந்தை மற்றும் உறவினர்களை அடியாலா சிறையில் சென்று சந்தித்தார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : பாகிஸ்தான் அரசின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கின்ற நிலையில், பாகிஸ்தான் அரசு நிர்வாகம் உறங்கிக்கொண்டிருக்கின்ற போது இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக்கொண்டது என விமர்சித்தார்,
மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் திறமையற்ற நிர்வாகத்தால் காஷ்மீரை மீட்க வெண்டும் என அரசின் கொள்கை யானது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.