சசிகலா மீதான மோசடி வழக்கு : விசாரணை தேதி ஒத்திவைப்பு

செவ்வாய், 28 மே 2019 (19:08 IST)
ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதி பெறாமல் ஜெ.ஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நியச்செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த தொலைக்காட்சி நிகழ்சிகளை செயற்கைக்கோள் மூலம் பதிவேற்றம் செய்வதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய அரசின் அனுமதி இல்லாமல் சிங்கப்பூர் டாலர்களாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்யப்பட்டது.
 
இந்நிலையில் இவ்வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 
 
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரில் உள்ள அக்ஹகார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கோர்டில் நேரில் ஆஜராகவில்லை.
 
இதனையடுத்து அந்நியச்செலாவணி வழக்கில் மே 13 ஆம் தேதி கோர்டில் ஆஜராகி நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தவிட்டது.ஆனால் பாதுகாப்பு கருதி சிறையில் இருந்தே காணொளி காட்சி மூலம் கடந்த 9 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவளித்தது.
 
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி சென்னை எழும்பூர் கோர்டில் சசிகலா ஆஜராகாத நிலையில் பாஸ்கரன் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு ஆஜரானார்.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு நகல் கிடைக்க தாமதம் ஆனதால் காணொளி காட்சிக்கு ஏற்பாடு செய்ய இயலவில்லை என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இவ்வழகில் விசாரணையை நீதிபதி வரும் மே 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
இன்று எழும்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார் பாஸ்கரன். அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சசிகலாவிடம் முன்வைக்கும் கேள்விகள் தமிழில் இருக்க வேண்டும் என்றுவேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து கேள்விகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்குத் தேவையா அவகாசம் தரும் பொருட்டு இவ்விசாரணை தேதியை ஜூலை 16 ஆம் தேதிகு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்