காலவரையற்ற விடுமுறை எடுக்க அனுமதி: மைக்ரோசாஃப்ட் அதிரடி அறிவிப்பு!

வெள்ளி, 13 ஜனவரி 2023 (08:16 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனம் தாங்கள் ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை எடுக்க அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
உலகம் முழுவதும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 
 
ஜனவரி 16 முதல் கால வரையற்ற விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஒருவேளை விடுமுறை எடுக்கவில்லை என்றால் அதற்கான சம்பளத்தை ஏப்ரல் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்