புகைபிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை; ஜப்பான் நிறுவனம் அதிரடி

வியாழன், 2 நவம்பர் 2017 (16:55 IST)
வேலை நேரத்தில் புகைபிடிக்கச் செல்லாத ஊழியர்களுக்கு ஜப்பான் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது.


 

 
ஜப்பான் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பியாலா இன்க் நிறுவனத்தின் ஆலோசனை பெட்டியில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது புகைபிடிக்கும் ஊழியர்களை விட புகைபிடிக்காதவர்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். எனவே அவர்களுக்குக் கூடுதல் நன்மைகள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பியாலா இன்க் நிறுவனத்தின் மூத்த தலைவர் தாகோ ஆசுகாவும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர். இதனால் புகைப்பிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதல் நன்மைகள் அளிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி வேலை நேரத்தில் புகைப்பிடிக்காமல் அதிக உற்பத்தி அளிக்கும் ஊழியர்களுக்குப் பரிசுகள் அளிப்பதைவிட கூடுதல் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளார்.
 
இந்த விதிமுறை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பின்பற்ற துவங்கியுள்ளனர். புகைபிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்