கூகுள் CEO சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம்?

Sinoj

வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:43 IST)
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சுந்தர் பிச்சை விரைவில் பதவி  நீக்கம் செய்யப்படுவார் அல்லது  ராஜினாமா செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான  கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார்.
 
இந்தியரான இவர் உலகின் முன்னணி  நிறுவனத்தின் உச்ச பதவியில் அமர்ந்திருப்பது இந்தியர்  அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில்,  கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சுந்தர் பிச்சை விரைவில் பதவி  நீக்கம் செய்யப்படுவார் அல்லது  ராஜினாமா செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி AI-யின் தோல்வியே  இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. அதாவது பிரதமர் பாசிசவாதியா ? என்று  ஜெமினி AI- யிடம் ஒருவர் கேட்டதற்கு, மோடி பின்பற்றும் சில கொள்கைகளால் அவரை பாசிசவாதி என்று அழைக்கிறார்கள்  என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்திருந்தது.
 
இது தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் விதி 3(1) மீறியது  மற்றும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளுக்கு முரணானது என்று மத்திய அமைச்சர் ராஜீவ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்