உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் மக்களுக்கு பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியர்கள் பயணிக்க பைசர், ஸ்புட்னிக் உள்ளிட்ட சில தடுப்பூசி வகைகளில் ஏதாவது ஒன்றை செலுத்தி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டு இல்லாததால் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகள் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டை இணைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சம்பந்தபட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு பயணிக்க அனுமதி அளித்துள்ளது.