உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதி ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதியாகும். இந்த பகுதியில் டிகிரி எப்போதும் மைனஸில் தான் இருக்கும். அதிகபட்சமாக மைனஸ் 71.2 டிகிரி அளவில் குளிர் இருக்கும். இந்த பகுதியில் ஜூன், ஜூலை போன்ற மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
இந்த பகுதியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடும் குளிர் காரணாமாக எதுவும் விளையாது. ஆகையால் இவர்களது உணவு மான் இறைச்சியும், குதிரை இறைச்சியும். அந்த பகுதியில் ஒரு கடையும் உள்ளது.