கணித தேர்வில் தோல்வி அடைந்த தங்கையை சுட்டு கொன்ற அண்ணன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (07:58 IST)
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தங்கை கணித தேர்வில் தோல்வியடைந்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஒகாரா என்ற மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுஜிதா என்ற  என்பவரிடம் அவரது அண்ணன் கணிதத்தில் எவ்வளவு மார்க் என்று கேட்டுள்ளார். அப்போது அவர் மதிப்பெண்களை கூறியபோது அவர் தோல்வியடைந்ததை கண்டு அண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. இந்த வாக்குவாதத்தை கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அவரை தாய் எழுந்து தனது மகனிடம் தங்கையிடம் சண்டை போட வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் தாயின் பேச்சைக் கேட்காத மகன் உசேன் திடீரென துப்பாக்கியை எடுத்து கணிதத்தில் ஏன் தோல்வி அடைந்தாய் என்று கூறி தங்கையை சுட்டுள்ளார்.

பின்பு துப்பாக்கி உடன் அவர் தலைமறை வாங்கி விட்டதாக தெரிகிறது. துப்பாக்கி சூடு காரணமாக படுகாயம் அடைந்த சஜிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர். கணிதத்தில் தோல்வி அடைந்து விட்டார் என்பதற்காக சொந்த அண்ணனே தங்கையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்