இந்த தாக்குதலை ரஷ்யாதான் நடத்தியிருக்க வேண்டும் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இந்த தாக்குதலை நேரடியாக ரஷ்யா நடத்தியதா அல்லது ரஷ்ய ஆதரவு பெற்ற புரட்சி குழு நடத்தியதா என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரவில்லை. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் போரை தொடங்கும் அறிகுறியா என உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.