கூட்டணி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை: அண்ணாமலை

ஞாயிறு, 19 மார்ச் 2023 (14:47 IST)
கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னால் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவில் உள்ள தலைவர்களே மறுப்பு தெரிவித்து வந்தனர். பாஜகவை பொருத்தவரை தலைமை தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்றும் மாநில தலைவர் இது குறித்து முடிவு எடுக்காது என்றும் கரு நாகராஜன், எச் ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்றும் தேர்தல் கூட்டணி குறித்து மத்திய தலைமை தான் முடிவு எடுக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
மேலும் காவல் அதிகாரி ஆக இருந்தபோது சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன் என்றும் தற்போது நான் கடன்காரனாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்