மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார் அண்ணாமலை.. என்ன காரணம்?

சனி, 18 மார்ச் 2023 (15:18 IST)
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகிய மூவரையும் அண்ணாமலை சந்திக்க இருப்பதாகவும் தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும்போது ஏற்படக்கூடிய கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த கருத்துக்கு மற்ற பாஜக தலைவர்கள் உடன்படவில்லை. 
 
இந்த நிலையில் கூட்டணி விவகாரத்தில் தேசிய தலைமையை சந்திக்க பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகவும் வரும் 26 ஆம் தேதி அவர் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் ஜே பி நெட்ட ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இன்னும் சில நிமிடங்களில் கமலாலயத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்