10 லட்சம் கேட்டு பெண்ணின் பிணத்தை திருடிய கொள்ளையன்
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (18:52 IST)
நைஜீரியாவில் கொள்ளையர்கள் பிணவறையில் இருந்த பெண்ணின் சடலத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் இருந்த பெண்ணின் சடலம் சமீபத்தில் மாயமாகியது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸாரும் இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில் பிணவறையின் மேலாளருக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவன் தான் தான் பிணத்தை கடத்தியதாகவும், பிணத்தை கொடுக்க வேண்டுமானால் ரூ.10 லட்சம் பிணைத் தொகையாக வழங்க வேண்டும் என பேரம் பேசினான்.
பின்னர் அந்த போன் நம்பரை வைத்து போலீஸார் கொள்ளையனை பிடித்தனர். பணத்திற்காக பிணத்தையும் விட்டுவைக்காத கொள்ளையனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பலர் போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.