இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வைட்பீல்டு அருகே மனநலம் பாதித்த நபர் ஒருவர் சுற்றித் திரிந்தார். அவரை பார்த்த அப்பகுதிவாசிகள் அவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி, அந்த அப்பாவியை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். வலியால் அந்த நபர் அலறித் துடித்தார்.
ஆனாலும் விடாத பொதுமக்கள், அவரை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து கேள்விபட்ட போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.