இந்த நிலையில், அந்த நாட்டில் காலரா பரவுவதாக தவறான தகவல் வெளியான நிலையில், மக்கள் சிலர் பயந்துகொண்டு அங்கிருந்து செல்ல முடிவெடித்தனர்.
அதன்படி, வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் இருக்கும் தீவு நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அப்படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதீல், குழந்தைகள் உள்பட 96 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
காலார பரவுவதக வதந்தி பரவிய நிலையில், படகில் போதிய வசதி இல்லாததாலும், கூட்ட நெரிசலாலும், இவ்விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.