எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் எவை எவை என்ற ஆய்வறிக்கையை வெளியிடுவதுண்டு. அந்த வகையில் 2018ஆம் ஆண்டுக்கான புதிய ஆய்வறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் கடத்தப்படுவது, கொல்லப்படுவது உள்ளிட்ட வகைகளின் அடிப்படையில் இந்த கணக்கீடு எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு கடந்த மாதம் வரை உலகம் முழுவதும் 80 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி உலகிலேயே பத்திரிக்கையாளருக்கு மிக ஆபத்தான நாடு என்ற பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது. சிரியா 2-ம் இடத்திலும், மெக்சிகோ 3-ம் இடத்திலும் ஏமன் 4-வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் உள்ளது.