ஆட்டத்தையே மாற்றிய ஷமி –இந்தியா வெற்றிக்கு 287 ரன்கள் இலக்கு

திங்கள், 17 டிசம்பர் 2018 (11:59 IST)
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமியின் அபாரமான பந்துவீச்சால் இந்தியாவின் வெற்றி வாய்ப்புப் பிரகாசமாகியுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைட்ன் தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் சேர்த்தது.

அடுத்துக் களமிறங்கிய இந்தியா, கோஹ்லியின் பொறுப்பான ஆட்டத்தால் 283 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் நடுவரிசை ஆட்டக்காரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் ரன்குவிப்பில் ஈடுபட்டது.. 4 வது நாளான இன்று சிறப்பாக விளையாடிய ஆஸி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் என்ற வலுவான் நிலையில் இருந்தது. ஆஸியின் கவாஜா 67 ரன்களோடும் கேப்டன் பெய்ன் 37 ரன்களோடும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா 232 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

இது எல்லாமே உணவு இடைவேளை வரைதான் அதன் பின்னார் நடந்தது எல்லாமே நம்பமுடியாதது. உணவு இடைவேளை முடிந்து முதல் ஓவரை வீசிய ஷமி டிம் பெய்ன் மற்றும் பிஞ்ச் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்தார். அடுத்தது உடனடியாக கவாஜாவை ஷமியும் அடுத்து வந்த கம்மின்ஸை பூம்ராவும் அவுட் ஆக்கி வெளியேற்றினர். இதனால் கடகடவென விழுந்த 4 விக்கெட்களால் அந்த அணி நிலைதடுமாறியது.

அதன் பின்னர் நாதன் லியன் 5 ரன்களில் ஷமி ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற சிறிது நேரம் தாக்குப் பிடித்த ஹேசில்வுட் ஸ்டார்க ஜோடியை  பூம்ரா பிரித்தார்.

இதனால்  300 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்னயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. ஆஸி கடைசி 53 ரன்களுக்கு 6 விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி அதிகப்ட்சமாக விகெட்கள் 6 வீழ்த்தினார். பூம்ரா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்