உலக அளவில் 65.66 லட்சமாக எகிறிய கொரோனா பாதிப்பு

வியாழன், 4 ஜூன் 2020 (09:13 IST)
உலக அளவில் தினந்தோறும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் 65.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி  உலக அளவில் 6,568,644
பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கொரோனாவால் 387,959 பேர் பலியாகியுள்ளதாகவும், 31,69,264 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக அளவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 19,01,783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு 109,142 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 584,562 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 432,277 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 287,406 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 279,856 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 233,836 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 184,425 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருவில் 178,914பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் உலக அளவில் கொரோனா பாதிப்பில் 7வது இடத்தில் உள்ள இந்தியாவில் 216,824 பேர் கொரோனாவால் 6,088 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்