சீனாவிலும் வூகான் என்ற பகுதியில் கொரோனா வைரஸ் பரவி அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பது அச்சத்திற்குரிய விஷயமாக கருதப்படுகிறது. சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு செல்லும் விமானங்களும், வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விமானங்கள் ரத்து காரணமாக ஹாங்காங் நாட்டிலுள்ள கேத்தே பசிபிக் என்ற விமான நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் செல்ல அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடுப்பு காலத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்பதும் மீண்டும் பணிக்கு எப்போது திரும்புவது என தெரியாமல் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது