கறிவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன் இதனை கலந்து நெய் விட்டு சாப்பிடலாம். மேலும் கறிவேப்பிலை துவையல் தயிர்சாதத்துடன் சுவையாக இருக்கும்.
ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும், மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து துவையலுடன் கலந்து இட்லி, தோசை, அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.