இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக கார்த்தி 29 எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து முக்கிய நடிகர்கள் படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.